University of St Andrews

Supportive and Palliative Care Indicators Tool

SPICT 5 SPICT-4ALL 5 India & Sri Lanka

கடுமையான அல்லது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோய்களால் உடல்நலம் மோசமடைந்து வருபவர்களுக்கு பெரும்பாலும் பொருத்தமான பராமரிப்பு திட்டமிடல் மற்றும் ஆதரவு கிடைப்பதில்லை. இதற்குக் காரணம், அவர்களின் தேவைகள் முறையாகக் கண்டறியப்படாதது, அல்லது தாமதமாக மட்டுமே அறியப்படுவதால், சரியான ஆதரவு சரியான நேரத்தில் வழங்கப்படாமல் போகிறது.

ஆதரவுத் மற்றும் நிவாரண பராமரிப்பு குறியீட்டு கருவி (Supportive and Palliative Care Indicators Tool – SPICT™) என்பது நோய் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆதரவுத் மற்றும் நிவாரண பராமரிப்பின் பயனை அடையக்கூடியவர்களா என்பதை கண்டறிய உதவும் எளிய கருவி. சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரியும் ஊழியர்கள், குறைவான மருத்துவச் சொற்களைக் கொண்ட எளிய, அணுகக்கூடிய மொழியில் SPICT™ பதிப்பின் தேவையை வெளிப்படுத்தினர். அந்த நோக்கத்திற்காக SPICT-4-ALL-TAMIL 2023,  SPICT-4ALL (2023 பதிப்பு) இலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இது அனைவரும் உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டறிந்து நிவாரண பராமரிப்பின் பயனை அடையக்கூடியவர்களை அடையாளம் கண்டு, அதைப் பற்றி உரையாடி, அவர்களின் எதிர்கால பராமரிப்பிற்கான திட்டமிடுவதையும் எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் வீட்டிலோ, பராமரிப்பு இல்லத்திலோ அல்லது மருத்துவமனையிலோ சிறந்த ஒருங்கிணைந்த பராமரிப்பைப் பெற உதவுவதே இதன் குறிக்கோள். கடுமையான அல்லது வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து SPICT-4ALL-TAMIL 2023,  கருவியைப் பயன்படுத்தி  தகுந்த ஆதரவை நாடி, தேவையான சமயத்தில் சரியான பராமரிப்பு மற்றும் சிகிச்சை  கிடைப்பதை உறுதி செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவின் தமிழ்நாடு, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் டாக்டர் ஜெனிஃபர் ஜெபா எஸ் மற்றும் இலங்கை ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஷாமினி பிரதாபன் தலைமையிலான குழுவால் SPICT-4ALL-TAMIL 2023 முறையாக மொழிபெயர்க்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, தமிழ் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது.

This SPICT  tool is free to download.  SPICT must not be reproduced in any other format nor modified in any way without permission.

All users are responsible for ensuring that they use the current version of  this SPICT tool and for any use they make of SPICT and SPICT resources.

Please register for SPICT news and updates

This is important so that all SPICT users are aware of any changes or important information from the SPICT programme.

SPICT-4-ALL-TAMIL 2023

 People with serious or life shortening conditions whose health is deteriorating often do not receive appropriate care planning and support. This is because their needs are either not recognized or only identified late, and the right support is therefore not offered in time.

The Supportive and Palliative Care Indicators Tool (SPICT™) is a simple tool developed to help healthcare and social care professionals identify people who could benefit from palliative care alongside their other treatments.

Staff working in healthcare, social care and care homes expressed the need for a version of SPICT™ in plain, accessible language with fewer medical terms.

SPICT-4ALL-TAMIL has been translated from the SPICT-4ALL (2023 version) to support the identification of people who may benefit from palliative care. It is intended to make it easier for everyone involved to recognize and discuss signs of possible health deterioration and plan future care. The goal is to enable patients and caregivers to receive better coordinated care—whether at home, in a nursing home, or in hospital.

It is anticipated that people with serious or life shortening conditions, together with their families, will use SPICT-4ALL-TAMIL to seek appropriate support and ensure that the right care and treatment are available when needed.

SPICT-4ALL-TAMIL has been translated systematically, tested, and adapted to the Tamil context by a team led by Dr Jenifer Jeba S, Christian Medical College Vellore, Tamil Nadu, India and Dr Shamini Prathapan, University of Sri Jayewardenepura Sri Lanka.

X